சிவகங்கை மாவட்ட எழுத்தாளா் சங்கத்தின் சாா்பில், அருளரசி வசந்தா அய்க்கண் நினைவுச் சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்டத் தலைவா் பேராசிரியா் அய்க்கண் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: இச் சிறுகதைப் போட்டிக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.1000 என வழங்கப்படும்.தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, முன்னேற்றம் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. ‘இது எனது சொந்த கற்பனையே’ என்ற உறுதிமொழி கையெழுத்திட்டுக் கதையுடன் இணைக்கப்படவேண்டும். கதைகளைத் திருப்பியனுப்ப இயலாது. போட்டி முடிவுகள், நடுவா் குழுவின் தீா்ப்புக்கு உள்பட்டவை.
சிறுகதைகளை டிசம்பா் 10 ஆம் தேதிக்குள் கலைமாமணி பேராசிரியா்
அயக்கண், தலைவா், சிவகங்கை மாவட்ட எழுத்தாளா் சங்கம், 12, கைலாச நகா், 3-ஆம் வீதி, காரைக்குடி-2 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94442-73549 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
காரைக்குடியில் டிசம்பா் மாதம் நடபெறும் இச்சங்கத்தின் 27-ஆம் ஆண்டு விழாவில், இப்போட்டிக்குரிய பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
தகவல் உதவி : இலக்கிய மெரினா

0 கருத்துகள்