ஓரா

ஓரா வகை :
ஓரா,புள்ளி ஓரா ,வழிய ஓரா,தடியன் ஓரா என்று நிறையே வகைகள் உள்ளன.
ஒவ்வொரு ஓராவும் வெவ்வேறு குணங்கள் கொண்டவை.
வித்தியாசமான சுவையும் உடையவை.

வசிப்பிடம் :
ஓராக்கள் பெரும்பாலும் வட்டாரம் என்று சொல்லப்படும் சேறு இல்லாத பகுதிகளிலும்
தாழை,பாசிகளிலும்  அதிகமாக வாழும்.நமக்கு வீடுப் போல ஓராவுக்கு பாசிகள் அது வசிக்கும்
பாசியை“ஓராபாசி”என்றே சொல்கிறோம் .

இனப்பெருக்கம் : 
தாழையில் அடைந்திருந்து (பதுங்கி)பிறகு மெல்ல வெளியே நீந்தி வரும் வேளையில் 
முட்டைகளை வெளியிடும்(பீய்ச்சி விடும்).அம்மீன்கள் முட்டைகளை வெளியிடும்போது 
பார்த்தால் பால்வெளியிலுள்ள அத்தனை நட்சத்திரங்களும் நீந்துவதைப் போல இருக்கும்.

ஓரா குஞ்சுகளை மற்ற பெரிய மீன்கள் பெரும்பாலும் இரையாக உட்கொள்ளாது.
(விழுங்காது)

தன்மை : 
இவ்வகை மீன்களுக்கு முதுகில் முட்கள் இருக்கும் ஓரா முட்கள் சுருங்கி விரியும்
உடையதாகும்.இதில் வழிய ஓரா மட்டும் எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள
மண்ணுக்குள்ளும் பாசிக்குள்ளும் ஒளிந்துக்கொள்ளும் மற்ற ஓராவை பிடிப்பது போல
அவ்வளவு எளிதாக பிடிக்கமுடியாது.ஓரா முள் குத்தினால் ரொம்ப நேரத்திற்கு கடுக்கும்.
(வலிக்கும்)

 சுவை :
எல்லா வகை ஓராக்களுமே குழம்புக்கு ஆகாது.குழம்பு வைத்தால் வெடுக்கு வாடை அதிகமாக இருக்கும்.அதனால் தோலுரித்து வறுத்தால் நாவின் எச்சில் ஊறுமளவுக்கு சுவையாக இருக்கும்.வறுத்த மீனை சுடசுட சாப்பிட்டால் மட்டுமே சுவையாக இருக்கும். ஆறிப்போனால் அதன் ருசியும் மாறிப் போகும் 




புகைப்படத்தில்: புள்ளி ஓரா 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. இது தெரியாம மணமேல்குடி யில் ஒருமுறை ஏலம் எடுத்துகொண்டு வீட்டுக்கு போனா வெரட்டி வெரட்டி அடிக்கிறாங்க ... பிறகு வறுவல் செய்து சுவைத்து சாப்பிட்டோம் அவ்வளவு ஓராவையும்

    பதிலளிநீக்கு