பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020


விதிமுறைகள்:

* சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.

* எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.

* சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் மார்ச் 31, 2020.

* வெற்றி பெற்ற சிறுகதைகளுக்கு புரட்சிக்கவிஞர் பிறந்தநாளான 2020 ஏப்ரல் 29 அன்று பரிசு வழங்கப்படும்.

* யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.

* எழுத்தாளரின் உண்மைப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். புனைப் பெயர் பயன்படுத்துவோரின் உண்மைப் பெயர் வெளியிடப்படாது.

* கதையைத் தட்டச்சு செய்து அஞ்சல் மூலமும் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டு கதைகளை அனுப்பவும்.

* கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும்.

* தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் தொகுக்கப்பட்டு தனியே புத்தகமாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தால் அச்சு வடிவிலும், கிண்டிலிலும் வெளியிடப்படும்.

* கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களுக்கே! தொகுப்புப் புத்தகத் தின் காப்புரிமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தைச் சேர்ந்தது.


நிபந்தனைகள்:

* கதைகள் பகுத்தறிவு, சமூகநீதி, ஜாதி-மத ஒழிப்பு, பெண்ணுரிமை, முற்போக்குக் கருத்துடையனவாக இருக்கவேண்டும்.

* சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.

* புதிதாக எழுதப்பட்ட கதைகள் எனில், இதுவரை எங்கும் (இணை யத் தளம், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட) பிரசுரிக்கப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் உறுதிமொழி அளிக்கவேண்டும்.

* 2019-ஆம் ஆண்டில் ஏதேனும் இதழில் வெளியான சிறுகதை என்றால், எந்த இதழில், எப்போது வெளியானது என்று குறிப்பிட்டு சிறுகதை வெளிவந்த இதழின் நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.

* கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ, போட்டியை நடத்துப வர்களுடனோ எவ்விதத்திலும் கடிதப் போக்குவரத்தோ தொலை பேசி தொடர்புகளோ மேற்கொள்ளக்கூடாது.

* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பரிசுகள்:

முதல் பரிசு: 5000

இரண்டாம் பரிசு: 3000

மூன்றாம் பரிசு: 2000

பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிற கதைகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500 பரிசளிக்கப்படும்.

“எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி-2020” என்று தலைப்பிட்டு கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
அஞ்சல் முகவரி: பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை சென்னை



கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி - 2020 முடிவுகள்

    http://www.senkani.com/2020/05/emraltu-contest-result.html

    பதிலளிநீக்கு