அனைவருக்கும் வணக்கம்...
மலேசியாவில் இயங்கும்
தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் சிறந்த புத்தகங்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தை கடந்த ஆறு
ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றது.
உலகளாவிய நிலையில் வாழும்
தமிழ் எழுத்தாளர்களுக்காக இந்த அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
சிறந்த ஒரு நூலுக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படுகிறது.
வெற்றியாளரும் அவருடன் இன்னொருவரும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான செலவுகளையும் சங்கம் ஏற்றுக் கொள்ளும்.தமிழ் எழுத்தாளர்களுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு இது.
2018, 2019 ஆகிய ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட எந்தவகை நூல்களும் வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு தலைப்பிலும்
ஐந்து படிகளை அனுப்பி வைக்க வேண்டும்.
2020 அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நூல்கள் வந்து கிடைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் தமிழ்நாடு
பதிப்பகத்தார் சங்கத்திடம் ஒப்படைத்தால் அவர்கள் அந்த நூல்களை எங்களுக்கு அனுப்பி
வைக்க உதவுவார்கள்.(+919790706548 இந்த எண்ணில் திரு.இராஜசேகர் அவர்களுடன்
தொடர்பு கொள்ளலாம்.)
உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இராஜேந்திரன்
தலைவர்,
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.
2 கருத்துகள்
வணக்கம். நான் இந்த ஆண்டுதான் கதைகள் எழுத ஆரம்பித்தேன்.நான் இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.ஆனால்இந்ந போட்டியில் புத்தகம் அனுப்ப வேண்டும் என கூறப்படுகிறது.நான் மின்னஞ்சல் மூலம் என் கதையை அனுப்பலாமா.தயவு செய்து பதில் அளியுங்கள்..
பதிலளிநீக்குஇது புத்தகத்திற்க்கான பரிசு போட்டி மட்டுமே. விரைவில் நீங்கள் புத்தம் வெளியிட வாழ்த்துக்கள்.
நீக்குஉங்கள் சிறுகதைகளை வானம் செயலியிலும் பதிவிட்டு உங்களுக்கென வாசகர்களை உருவாக்கி கொள்ளலாம் - https://vaanam.page.link/download