வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் - 2020

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த ஐந்து வருடங்களாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்றே..!

அந்த வகையில் இந்த வருடமும் வரும் டிசம்பர் மாதம் அப்போதைய சூழலைப் பொறுத்து நடைபெறவுள்ள வாசகசாலையின் "முப்பெரும் விழா" மேடையில், இவ்வருடத்திறகான 'தமிழ் இலக்கிய விருதுகள்' வழங்கப்படவுள்ளன.

முந்தைய வருடங்களில் சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக எழுத்தாளர் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு முதல் சிறந்த சிறார் இலக்கியம் , சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய மூன்று புதிய பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த எட்டு பிரிவுகளிலும் விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு சேர்த்து ரூபாய் 5000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

முழுக்க தேர்ந்த வாசகர்களை மட்டுமே  கொண்ட தேர்வுக்குழுவின் மூலம், நமக்கு அனுப்பப்படும் அனைத்து படைப்புகளையும் படித்து விவாதித்து, நேர்மையான முறையில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும் விருதுகள் என்பதே வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகளின் தனிச்சிறப்பு..!

இவ்விருதுகளுக்கு உங்களது படைப்புகளை அனுப்புவதற்கான விதிமுறைகள் கீழே...

* மேற்கண்ட எட்டுப் பிரிவுகளின் கீழ் வரும் படைப்புகள் எதுவாகினும் அவை 2019 நவம்பரிலிருந்து 2020 அக்டோபர் மாத காலகட்டத்திற்குள் மட்டுமே வெளிவந்தவையாக  இருக்க வேண்டும்.

* படைப்புகள் அனைத்தும் முதற் பதிப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.மறு பதிப்பு/மறுபிரசுரம்/முன்னர் வெளியான நூல்களிலிருந்து உருவாக்கப்படும் தொகுப்பு நூல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

* அது போல கட்டுரைப் பிரிவில் முனைவர் பட்ட ஆய்வேடுகள்/ஆராய்ச்சி நூல்களை கண்டிப்பாக அனுப்ப வேண்டாம்.

* புத்தகங்களைத் திருப்பி அனுப்ப இயலாது என்பதால் படைப்புகளில் ஒரே ஒரு பிரதியை மட்டும் எங்களுக்கு அனுப்பினால் போதுமானது.  அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 25.10.2020

* எனவே படைப்பாளிகள் மற்றும் பதிப்பகத்தார் மேற்கண்ட நிபந்தனைகளின் கீழ்வரும் படைப்புகளை மட்டும் வாசகசாலைக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

* வாசகர்களும் மேற்கூறிய விதிகளின்படி நீங்கள் தகுதியானது எனக் கருதும் படைப்புகளின் ஒரு பிரதியை சுயவிருப்பத்தின் பேரில் எங்களுக்கு அனுப்பலாம்.

* வாசகர்கள் எங்களுக்கு வாட்ஸப் / மின்னஞ்சல் / பேஸ்புக் மெசேஞ்சர் வழி சரியான நூல்களைப் பரிந்துரையும் செய்யலாம். உங்களைப் பற்றியும், நூல் பற்றியுமான குறிப்பும் அவசியம் பரிந்துரையுடன் இடம்பெற வேண்டும்.

* தேர்வான நூல் பற்றிய அறிவிப்பு டிசம்பர் இரண்டாம் வாரம் முகநூல் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடப்படும்.

* முக்கியமாக இது போட்டியன்று; வாசகர்களின் ரசனை சார்ந்த தேர்வு என்பதை மனதில் கொள்ளவும்.

 

முக்கிய குறிப்பு:

இவ்விருதுகளுக்காக வாசகசாலை அமைப்புக்கு அனுப்பப்படும் புத்தகங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அனுப்பப்படாத புத்தகங்கள் எதுவாகினும் எக்காரணம் கொண்டும் அவை தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்பதைத் தெளிவாக உணரவும்.

மேலும் இது தொடர்பான தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:- (கண்டிப்பாக வாட்ஸப்பில் மட்டும் தொடர்பு கொள்ளவும்)

கார்த்திகேயன் - 9942633833

அருண் - 9790443979

மாரி - 9600348630

 

புத்தகங்களை அனுப்ப வேண்டிய முகவரி: -

வெ.கார்த்திகேயன்,

80, சுவாமிநாதன் இல்லம், (மூன்றாவது வீடு, தரைத்தளம்)

முதல் பிரதான சாலை,

ஸ்ரீ சத்ய சாய் நகர்,

மாடம்பாக்கம் பிரதான சாலை,

ராஜ கீழ்ப்பாக்கம்,

கிழக்கு தாம்பரம்,

சென்னை - 600073

தொடர்பு எண் - 9942633833         

மின்னஞ்சல்: [email protected]

கருத்துரையிடுக

0 கருத்துகள்