பச்சையம் என்பது பச்சை ரத்தம்

இயக்குனர் பிருந்தா சாரதி அவர்களின் 7வது கவிதைத் தொகுதி  “பச்சையம் என்பது பச்சை ரத்தம்” படைப்பு குழுமம் வெளியீடு. 125 ஹைக்கூ கவிதைகள்.


இந்தத் தொகுதியில் தொட்ட இடமெல்லாம் ஈரம்; பசுமை; குளர்ச்சி; பச்சை.இயற்கையின் அழகான படப்பிடிப்பு இந்தத் தொகுதி. பிருந்தா சாரதியின் இதயத்தின் தன்மை; ஈரம்.இவை ஒவ்வொன்றும் ஒரு வைரம், வைரத்தின் உள்ளே இருக்கும் ஈரம், இல்லையென்றால் அடியாழக் குளிர் முத்து. இதயக் கடலின் அடியாழம் காண, கண்டு முத்தெடுக்க, மூழ்க வேண்டும். இங்கே மூச்சடக்கத் தேவையில்லை. இது பிருந்தா சாரதி படைத்த அழகிய இயற்கைக் காவியம்.       

        - கவிஞர் புவியரசு

உயிர்கள் வாழத் தகுதியற்ற உலகை சிறிது சிறிதாக உருவாக்கி வருகிறான் மனிதன் என்பதைப் பேருரையாக, பெருங்கதையாகப் பேசி, எழுதி உணர்த்துவதைக் காட்டிலும் கவிஞர் ஒரு மின்னல் வெட்டிச் சிலிர்க்கும் நேரத்தில் நமக்கு உணர்த்தி விடுகிறார்.

         - கோவை சதாசிவம், சூழலியலாளர்.

நூல் விவரக் குறிப்பு:

நூல் பெயர்: பச்சையம் என்பது பச்சை ரத்தம்

வகைமை: ஹைக்கூ கவிதைகள்

ஆசிரியர்: பிருந்தா சாரதி

பதிப்பு: முதற்பதிப்பு 2020

முகப்பு: ஓவியர் ரவி பேலட்

வடிவமைப்பு  : புலவர் மீரான்

வெளியீடு: படைப்பு பதிப்பகம்

விலை: ரூ.100 (இந்திய ரூபாய்)

இயக்குனர், கவிஞரென பன்முகம் கொண்ட பிருந்தா சாரதி அவர்களுக்கு செங்கனி.காம் சார்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும்..




கருத்துரையிடுக

0 கருத்துகள்