மனக்கதவுகள் திறப்போம்

 மனக்கதவுகள் திறப்போம் 

(புத்தக விமர்சனம் )

புத்தகம்: மனக்  கதவுகள் திறப்போம் 

ஆசிரியர் :மா ஜெயமேரி 

பக்கங்கள் :136

பதிப்பகம் : செங்கனி பதிப்பகம் 


ஜெயமேரி அவர்களின் முதல் புத்தகம் இது.ஜெயமேரி ஒரு சமூக செயல்பாட்டாளர் என்பதால் இந்த புத்தகத்தை நான் மிகவும் ஆர்வமாக வாசித்தேன்.ஒரு களப்பணியாளர் ஆசிரியர் இப்படி பன்முகத் திறமை வாய்ந்த ஜெயமேரி அவர்களின் எழுத்துக்களையும் ருசித்துப் பார்க்க ஆவல்.


நான் எதிர்பார்த்தது போல் அதற்கு மேலேயும் இதில் நிறைய கதவுகள் திறந்தது.வாழ்வியல் சார்ந்த விஷயங்கள்.கடினமாய் எந்த சூத்திரமும் இல்லை ஆனால் வாழ்வியலுக்கு தேவையான சூத்திரங்கள் இந்த புத்தகத்தில் உண்டு.இருபத்தி நான்கு கட்டுரைகள் ஒவ்வொரு கட்டுரைகளும் நம்மோடு பேசுகின்றன.வாழ்வின் தவறவிட்ட நிமிடங்கள் தவறவிடக்கூடாத நிமிடங்கள்.இப்போதாவது இது நமக்கு நினைவு வந்ததே என்று எண்ணக்கூடிய சில வார்த்தைகள்.ஒரு சகோதரி நம்மோடு இருந்து ஒரு அறிவுரை சொன்னால் எப்படி இருக்கும்.இந்தப் புத்தகம் வாசித்தால் உங்களுக்கே புரியும்.


நிறைய சொலவடைகள் திருக்குறள் இலக்கியத்தில் உள்ள வரிகள் இயல்பாய் பேசக்கூடிய சொற்கள் புரிந்துகொள்ளக்கூடிய சொற்கள் நினைவில் வைத்துக்கொள்ள கூடிய சொற்கள் இப்படி ஒவ்வொன்றையும் நமக்கு அறுசுவை விருந்து கொடுத்திருக்கிறார் ஜெயமேரி அவர்கள்.


இந்தப் புத்தகம் ஏதோ ஒன்றை புதிதாய் கற்றுக் கொடுக்கவில்லை.புதிய பாதையில் வழி நடத்தவில்லை.ஆனால் நம் வாழ்வை  எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்ற உத்திகளை சொல்லிக் கொடுத்திருக்கிறது.நாம் நடந்து செல்லும் பாதையில் நிறைய பூக்கள் இருக்கிறது.ரசித்துச் செல்ல சொல்லிக்கொடுக்கிறது.பல மேடு பள்ளங்கள் இருக்கிறது.கற்றுச் செல்ல சொல்லிக்கொடுக்கிறது.நம்மோடு பல ஏமாற்று பேர்வழிகள் பயணிக்கிறார்கள் சுதாரித்து செல்ல சொல்லிக்கொடுக்கிறது.


இயல்பை இன்னொரு முறை நினைவூட்டி செல்கிறது இந்தப் புத்தகம்.

- சுதா பழனிசாமி 


கருத்துரையிடுக

0 கருத்துகள்