தமிழர் திருமணமும் இனமானமும்
தலைப்பு - தமிழர் திருமணமும் இனமானமும்
பேராசிரியர் க.அன்பழகன்
விலை -₹550
பக்கங்கள் 556
நூல் பெற : 9750856600
பின்னட்டை குறிப்பு-
குடும்ப வாழ்வுக்காகப் பேராசிரியர் தரும் இந்த அறிவுரை பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கும் பொருந்தும்.
இப்படி அறிவார்ந்த முறையில் இனமானம் போற்றிடும் வகையில், தமிழர் திருமணங்கள் நடைபெற வேண்டுமெனவும், அதற்குரிய காரண, காரிய விளக்கங்கள் எவையெனவும் எடுத்துரைக்க முற்பட்ட பேராசிரியர் அவர்கள் தனது இதயக் கருவூலத்திலிருந்து ஒன்பான் மணிகளின் குவியலையே பொழிவதுபோன்று ஆதாரங்களையும், மேற்கோள்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் இலக்கியச் சான்றுகளையும் கொண்டு வந்து காட்டி மணவிழாவுக்கு மட்டுமன்றி, மானத்தோடு வாழ்வதற்கும், இந்த இனம் உலகில் ஏறுநடைபோடுவதற்கும் என்றைக்கும் பயன்படக்கூடிய இந்த எழுத்துப் பேழையைத் தந்துள்ளார். இது எழிற்பேழை! எண்ணப் பேழை! இனமானப்பேழை! எழுச்சிப்பேழை! இளைஞர், பெரியோர் அனைவரின் கையிலும் இருந்திடவேண்டிய கருத்துப்பேழை! கொள்கைப் பேழை!
அன்புள்ள,
மு. கருணாநிதி
0 கருத்துகள்