இதுவரையிலான உங்கள் வாசிப்பில் ,தமிழ் நிலத்தின் தனித்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையிலான சிறுகதைகளை அதாவது, சடங்குகள், திருவிழாக்கள், நம்பிக்கைகள் ,வழிபாட்டு முறைகள், வேளாண்மை மற்றும் பிற தொழில் சார் பண்பாட்டு நிகழ்வுகள், உறவுமுறை, திருமணச் சடங்குகள், பிறப்பு மற்றும் இறப்பு சடங்குகள் தொடர்பான கள், உறவு முறைகள், உடுத்தும் உடைகள் ஆபரணங்கள் ,அந்தந்த ப்பகுதிகளில் நடக்கும் திருவிழாக்களை யும் அதை ஒட்டி நடக்கும் நிகழ்வுகளையும் மையப்படுத்தியவைகளையும், நேர்த்திக்கடன், குறி சொல்லுதல், குறி பார்த்தல், நீத்தார் சடங்குகள் , போன்ற நம்பிக்கை சார்ந்தவை உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றை மிக அழுத்தமாகப் பதிவுடன் புனையப்பட்ட சிறுகதைகளை க்குறித்து தகவல் தாருங்கள்(, முடிந்தால் ஆசிரியர், கதைத் தலைப்பு, அதன் மையம், அது எந்தத் தொகுப்பில் உள்ளது? பதிப்பகம் விவரம், ) சாகித்திய அகடாமி காக இப்படியான ஒரு தொகுப்பு பணியில் உள்ளேன். பிற இந்திய மொழிகளிலும் இத்தொகுப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது. உங்கள் பரிந்துரையை comment இல் தாருங்கள் நண்பர்களே......
இந்த லிங்கை க்ளிக் செய்து பரிந்துரை செய்யவும்: https://m.facebook.com/story.php?story_fbid=3552981821395435&id=100000509558594
0 கருத்துகள்