பவ்டா அறிவிக்கும் சமூக கட்டுரை கவிதை போட்டிகள்


தலைப்புகள்
  1. உளவியல், சமூக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையை சரி செய்ய வழிமுறைகள்.
  2. கொரோனாவை வெல்லும் மனித இனம்.
  3. கொள்ளை  நோய்கள்இல்லாத உலகம் படைப்போம்.
  4. சுகாதாரம் கற்போம் ..! நோய்களை தடுப்போம்..!
 நிபந்தனைகள்
  1. கட்டுரை மற்றும் கவிதைகள் அவரவர் சொந்த படைப்பாக மட்டும் இருத்தல் வேண்டும்.
  2. மேற்கோள்கள் காட்டப்படும் போதும், விஞ்ஞான கருத்துகள் குறிப்பிடும் போதும் அவைகள் யாருடையவை என்று குறிப்பிடப்பட வேண்டும்,
  3. கட்டுரைகள் கவிதைகள் நோய்கள் உளவியல் சமூக பிரச்சினைகளை வெல்லும் முறைகள், தடுக்கும் வழிமுறைகள் கொண்டதாக அமைய வேண்டும்.
  4. அரசியல் நோக்கத்தோடோ அல்லது அரசினை விமர்சனம் செய்யும் முறையிலோ கட்டுரைகள் அமையக்கூடாது.
  5. அரசுகள்மேற்கொண்ட பணிகளில் மேலும் எவை எவை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஆலோசனைகள் இருக்கலாம்.
  6. எதிர்காலத்தில் புதிய நோய்கள் உருவாகி மனிதர்களை தாக்கும் சூழ்நிலைகளை தடுக்க, உரிய வழிமுறைகளாகவும் ஆலோசனைகளாகவும் கட்டுரைகள் இருக்க வேண்டும்.
  7. ஒருவர் எத்தனை  கட்டுரை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
  8. கட்டுரைகள், கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30-04-2020.
  9. கட்டுரைகள், கவிதைகள் வாட்ஸ்அப் அல்லது Email முலம் தமிழ்/ஆங்கில மொழிகளில் அனுப்பப்பட வேண்டும். வாட்ஸ் அப் எண்: 9688949186 மற்றும் Email - [email protected]).
  10. பரிசுக்குரியவைகளை செய்வதில் தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
  11. மேற்குறிப்பிடப்பட்ட நான்கு தலைப்பில் உள்ள கட்டுரைகள் மற்றும்  கவிதைகளுக்குமுதல் ஐந்திற்கு பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (ரூ. 10000/- , ரூ. 7500/- , ரூ. 5000/- , ரூ. 3000/ எ-
  12. தாங்கள் எழுதும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலம் கவிதை 40 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்
  13. கவிதை மற்றும் கட்டுரைகளை அனுப்புபவர்கள் தங்களின் பெயர்தொலைபேசி எண், முழு முகவரி மற்றும் வங்கி கணக்கின் முழுவிபரத்தையும் (Name in your Bank Passbook, Account Number, Bank Name Branch Name, IFSC Code) தவறாமல் அனுப்ப கேட்டுக்கொள்கிறோம்.




அன்புடன்
டாக்டர். செ. ஜாஸ்லின் தம்பி,
நிறுவனர்:பவ்டா குழுமம், 858, கிழக்கு பாண்டி ரோடு,
விழுப்புரம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்