அமரர்.ஓவியர் திலகம்.எஸ்.ராஜா அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி
புதுக்கோட்டை மாவட்ட ஓவியர்கள் முன்னேற்ற நலச் சங்கம் (பதிவு எண்:77/2020) சார்பில்
ஓவியப் போட்டி - 2020
கொரோனா காலத்தில் மாணவர்களின் ஓவியத்திறனை வெளிப்படுத்தும் விதமாக, பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்படும் ஓவியப் போட்டியில் தங்கள் குழந்தைகளை பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பங்கேற்பாளர்களுக்கான பிரிவுகள் மற்றும் தலைப்புகள்
3 முதல் 5 ஆம் வகுப்பு வரை : கடற்கரை காட்சிகள் (அ) விளையாட்டு பூங்கா.
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை: படிப்பதற்கே வலைதளம் (அ) மரம் நடுவோம் மழை பெறுவோம்.
9, 10 ஆம் வகுப்பு : இந்திய வரலாற்று சின்னங்கள் (அ) பண்டிகை கொண்டாட்டம்.
11,12 ஆம் வகுப்பு : கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு.
குறிப்புகள் :
1. ஓவியங்களை ஏ-4 அளவுள்ள பேப்பரில் வரைந்து அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு,
ஆறுதல் பரிசு, நினைவுப் பரிசு வழங்கப்படும்.
2. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெறலாம்.
3. ஓவியங்களை 10.10.2020 க்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டுகிறோம். ஓவியத்தின் பின்புறம் முழு முகவரியை எழுதவும்.
4. பரிசளிப்பு விழாவிற்கான தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
5. அனைத்து ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெறும்.
அனுப்ப வேண்டிய முகவரி : ஓவியர்.சித்ரகலா K. ரவி, RKR AWARDS
எண் : 15, KP சூப்பர் காம்ப்ளக்ஸ், 4128 தெற்கு 3 ஆம் வீதி, புதுக்கோட்டை - 622 001.
மேலும் விபரங்களுக்கு : 9865 224335, 9894 348100, 9443 409243.
0 கருத்துகள்