தாய்மொழி நடத்தும் மின்னிதழ் பெண்களுக்கான சிறுகதைப் போட்டி - 2021

தாய்மொழி மின்னிதழ்
பெண்களுக்கான
சிறுகதைப் போட்டி

தாய்மொழி சிறுகதைப் போட்டிக்கு சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.

தாய்மொழி சிறுகதைப் போட்டி என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31, மார்ச் 2021.

பரிசுத்தொகை:

* முதல் பரிசு - ₹1500
* 2ஆம் பரிசு - ₹1000
* 3ஆம் பரிசு - ₹750

அறிமுக எழுத்தாளர்களுக்காக முதல் சிறுகதை ஊக்கப்பரிசுகள் - 10 நபர்கள்

நினைவில் கொள்க:

- இந்தப் போட்டி பெண்களுக்கு மட்டுமே. சிறுகதையின் கரு எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பண்பாடு, இன, மொழி, மத ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலான சிறுகதைகள் நிராகரிக்கப்படும்.

- அறிமுக எழுத்தாளர் என்றால் அதைக் குறிப்பிட வேண்டும்.

- உங்கள் சொந்தக் கற்பனையில் உருவான, எங்கும் பிரசுரம் ஆகாத கதை என்ற உறுதிமொழியுடன் அனுப்ப வேண்டும்.

- ஒழுங்குறியில் (Unicode) ஒளியச்சு செய்யப்பட்டு 1200 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

- [email protected] என்கிற மின்னஞ்சல் அல்லது 83001 77442 என்கிற வாட்ஸப் எண்ணுக்கும் அனுப்பி வைக்கலாம்.

மின்னஞ்சலுக்கு அனுப்ப இயலாதவர்கள், கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பலாம்.

திரு.வை.சண்முகசுந்தரம்

ஆசிரியர், தாய்மொழி,

M-31 (387), காவலர் நகர்,

கணபதி, கோயம்புத்தூர் - 641006

சிறுகதையோடு எழுதியவரின் பெயர், அஞ்சல் குறியீட்டு எண்ணோடு முழு முகவரி, தொடர்பு எண் குறிப்பிடப்பட வேண்டும்.

- முதல் மூன்று பரிசுகளுக்குரிய கதைகள் ஆசிரியர் குழுவால் தேர்ந்து எடுக்கப்படும். அவை தவிர முதல் முறையாக சிறுகதை எழுதும் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தகுதியான IO கதைகளும் அறிவிக்கப்படும்.

-போட்டி முடிவுகள் வரும்வரை சிறுகதைகளை வேறு போட்டிகளுக்கோ, பத்திரிகைகளுக்கோ அனுப்ப வேண்டாம்.

- போட்டி முடிவுகள் சித்திரை மாத (ஏப்ரல்) தாய்மொழி மின்னிதழில் அறிவிக்கப்படும்.

- வாணி பதிப்பகத்தின் மூலம் பரிசுக்குரிய கதைகள் நூலாக வெளியிடப்படும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்