பட்டிமன்ற பேச்சாளர்களுக்கான அழைப்பு

 வணக்கம், 

சென்ற மாத ஆண்டு விழா நிகழ்வில் அறிவித்தது போல், இந்த வருட தீபாவளிக்கு, நம் 'சஹானா' இணைய இதழ் சார்பாக, சிறப்பு பட்டிமன்றம் நடத்த திட்டமிட்டுள்ளோம் 

சிறந்த ஒரு பேச்சாளருக்கு பரிசு, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். கலந்து கொள்ளும் அனைவருக்கும் eCertificate வழங்கப்படும்.


பதிவு செய்ய கடைசி நாள் : செப்டம்பர் 15, 2021


இது ஒரு இணைய நிகழ்வாக இருக்கும் (Online Event). தீபாவளிக்கு பத்து நாட்களுக்கு முன்பே பட்டிமன்ற நிகழ்வு பதிவு செய்யப்பட்டு, தீபாவளி அன்று நம் YouTube சேனலில் வெளியிடப்படும். Google Meet அல்லது Zoom மூலம், நிகழ்வு ரெக்கார்ட் செய்யப்படும்.


நீங்கள் செய்ய வேண்டியது:

1.[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, 'சஹானா இணைய இதழின் தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் பேச விருப்பம்' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் 

2. உங்கள் பெயர், ஊர், இதற்கு முன் பட்டிமன்றம் அல்லது வேறு ஏதேனும் நிகழ்வில் பேசிய அனுபவம் இருந்தால், அதையும் குறிப்பிடுங்கள்

3. நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுடன், உங்களுடைய வீடியோ ஒன்றும் இணைக்க வேண்டும். இன்றைய காலகட்டத்துக்கு பொருந்தும் ஏதேனும் ஒரு தலைப்பை நீங்களே தேர்ந்தெடுத்து பேசி, இரண்டு முதல் மூன்று  நிமிட வீடியோவாக பகிர வேண்டும்  

நமது தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 


என்றும் நட்புடன்,

ஆசிரியர் - சஹானா இணைய இதழ் 

[email protected]




கருத்துரையிடுக

0 கருத்துகள்