அறமனச்செம்மல் சீனு.செல்லப்பா இலக்கிய விருதுகள் - 2024
மொத்த பரிசுத் தொகை ரூ. 1,00,000/-
இலக்கியப் புரவலர், உழைப்பின் மகத்துவத்தை உணர்த்திய
உன்னதமானவர், அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா
அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் தமிழில் வெளிவரும்
மிகச்சிறந்த இலக்கிய நூல்களை ஊக்குவித்து விருது மற்றும்
பரிசுத்தொகை (ரூ.10,000) வழங்கி நூல்களையும்,
நூலாசிரியர்களையும் கொண்டாட எண்ணுகிறோம்.
அவ்வகையில் முதல் ஆண்டின் இந்த அறிவிப்பை
வெளியிடுவதில் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் பெருமை
அடைகிறது.
பிரிவுகள்
மரபுக் கவிதை * புதுக்கவிதை * ஹைக்கூ கவிதை
சிறுகதை நாவல் * சிறார் இலக்கியம்
கட்டுரை [சமூகம், அரசியல், வரலாறு] * கட்டுரை [கலை, இலக்கியம்]
தன்னம்பிக்கை நூல் * சிறந்த சிற்றிதழ்
நூலாசிரியர், பதிப்பாளர் கவனத்திற்கு
நூல்கள் 2023ல் வெளிவந்ததாக இருக்க வேண்டும்.
நூல்கள் முதல் பதிப்பாக இருக்க வேண்டும்.
நூல்களில் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.
நூல்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 12.4.2024
விருது முடிவுகள் வெளியிடும் நாள் 22.4.2024
விருது வழங்கும் விழா புதுக்கோட்டையில் 30.4.2024 அன்று நடைபெறும்.
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்,
822, பெரியார் நகர்,
புதுக்கோட்டை - 622 003.
பேச : 94431 26025
0 கருத்துகள்